Wednesday, January 2, 2008

முகத்தை தொலைத்த முகமூடி !

ஒரு முகம்
சிலரால் விரும்பப்படுகிறது ...

பலரும் விரும்பிடவேண்டி
ஒப்பனை செய்து கொள்கிறது ...

எல்லாரும் விரும்பிடவேண்டி
ஒவ்வொருவருக்கும் ,
ஒவ்வொரு முகமூடி அணிகிறது...

யாரும் அந்த முகத்தை
பார்க்கவில்லை - முகமூடியை
பார்க்கிறோம் என உணரவும் இல்லை !

விரும்பப்படாத முகம் ,
அழகானதாகவும் இருக்கக்கூடும் !

5 comments:

maya said...

முற்றிலும் சரி. ஆனால் இங்கே முகமூடி இல்லா மனிதர் வெகு சொற்பம்..

உண்மையான முகம் நமக்கே தெரியாது என்பது தான் நிதர்சனம்

அப்படியே உண்மையாய் இருந்தாலும்.. அவன் இங்கே அங்கீகரிக்க படுவதில்லை

ஒருவனை முகமூடி அணிய தூன்டுவது இந்த சமூகம் தான்..

இது தனிப்பட்ட ஒருவனின் தவறு அல்ல..

This is my opinion.

Lakshmi Sahambari said...

சரி தான் - இதை தவறு எனச் சொல்வதற்கில்லை !

நாம் நமக்காக வாழ்வதை விட சமூகத்தின் அங்கீகாரத்திற்காய் வாழ்கிறோம் - அங்கீகாரம் கிடைப்பது நமக்கு பல நேரங்களில் நமக்காக வாழும் பிரமையை ஏற்படுத்தி விடுகிறது !
This is a seperate topic -we'll dicuss!

நாம் சமூகத்திற்காக ( வேண்டியவர்கள் மற்றும் வேண்டாதவர்கள் ஆகிய இரு சாராருக்கும் ) முகமூடி அணியத்துவங்கி நமக்கான முகமே நமக்கு தெரியாமற் போய்விடுகிறது... சில நேரங்களில் முகம் தொலைந்து முகமூடி மட்டுமே மிஞ்சுகிறது...

This poem may not be completely true - but to an extent it is :)

narayan said...

its true. mukamutee ella tha maneethanal etha ulakelum vala eylathu,mukamutee ella tha maneetha nuku ella etamum por kalam than. mukamutee elaa tha oru mukam erupathu satheyam ellai.
avrku atra mukamtee yai avrkala atru kolu kerarkal.

Known Stranger said...

A poem on incoginto faces. wow lovely

Lakshmi Sahambari said...

Thnks For ur comments :-)