Wednesday, January 2, 2008

கருவறை வாசனை

அன்புள்ள அம்மா ,

கடவுளின் மடியில்
விளையாடிக் கொண்டிருந்தேன்.
கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி ,
என்னை ,
உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் !


இருட்டாக இருந்தாலும் ,
இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்..
முதலில் பயமாக இருந்தாலும் ,
பிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் !

நீ சிரிக்கும் பொழுது ,
நானும் சிரித்தேன்..
நீ அழும் பொழுது ,
நானும் கண்ணீரில் ...

பிறகு தான் புரிந்தது
நம்மிடையே ஒரு புது உறவு மலர்ந்தது என்று ...
ஆமாம்
நீ என் அம்மா !

"அம்மாவும் நான் தான் "
- கடவுள் சொல்லி இருக்கிறார் !
இன்னொரு கடவுள் அம்மாவா - இல்லை
அம்மா இன்னொரு கடவுளா ?
தெரியவில்லை ...
இப்படி பல விஷயங்களை
யோசித்துக்கொண்டே வளர்ந்தேன் !

உன்னை பார்க்க வேண்டும் போல் இருந்தது ,
ஏனென்றால் நீ கடவுளின் சாயல் !

அப்பொழுது தான்
ஒரு தீராத வலி என்னை ஆட்கொண்டது ,
ஒரு அரக்கன் என் உடலசைவுகளைச் செயலிழக்கச் செய்தான் ...
ஓரிரு நிமிடங்களில் என் போராட்டம் தோல்வியில் முடிந்தது ।

நான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழந்தேன் ॥

உன்னை பார்க்கமலே
உன்னை பிரிகிறேன்...
எனக்கு பிடித்தமான அந்தக் கோவிலை விட்டும்...

உன்னோடு விளையாட ஆசைப்பட்டேன்
என் பிறப்பே விளையாட்டாகப் போய்விட்டது
அந்த வெளிச்சத்து வாசிகளுக்கு ...

மீண்டும் அதே கடவுளின் மடியில் ..
அதே விளையாட்டுக்கள் தான் ...
புதியதாக இன்னொரு ஆசையும்..
மீண்டும்அதே இருட்டறையில் ,
உன் அன்பு மகளாக உலா வர வேண்டும் ...
மீண்டும் நுகர வேண்டும் ,
உன் கருவறை வாசனையை ...




இப்படிக்கு ,
பிறவாத உங்கள்
குட்டிப்பாப்பா :)

17 comments:

Unknown said...

come out with many more poems....

Unknown said...

Romba நல்ல irruku......

Unknown said...

nice one

maya said...

Wonderful theme.

நல்ல கவிதை என்பது ஒரு குட்டி பிரசவம் போல தான்

ஒரு கரு உருவாகி.. வளர்த்து.. உருவம் வடித்து..

அதை நாமே வாசிப்பது.. நம் குழந்தையை நாமே ரசிப்பது போல தான்..

sridhar said...
This comment has been removed by the author.
sridhar said...

இந்த கருவறை வாசனையை உணர்ந்தால்,
அரக்கர்கள் எல்லோரும் மனிதர்களாக மாறி
பெண் சிசு கொலை முற்றிலும் இல்லாமல் போய்விடும்...

Anonymous said...

Realy touching poem,It toches every on who reads, Every one reads will feel pity for the piravaa kulanthai and act.. Wish you to write more poems on awareness

Anonymous said...

Lovely poem, please continue writing...

Anonymous said...

கவிதையின் கருப்பொருள் நன்றாக இருக்கிறது!

மதுமி said...

இன்னொரு கடவுள் அம்மாவா? இல்லை
அம்மா இன்னொரு கடவுளா?

அழகு... அழகு ...

Unknown said...

Simply mind blowing!! romba nalla iruku..

Unknown said...

i believe its an impression from poet aruvumathi.....
but its good.....

Anonymous said...

Realy very nice poem.


write many more

All the best

Known Stranger said...

Monday, March 06, 2006
Abortion
Tears of a life
bleeds in red ,

with no eyes
to shed,
and no lips
to cry

Abortion.

------

ஒரு உயிரின் கண்ணீர்
குருதியாய்.

கண்கள் இல்லை,
அழ ;
உதடுகள் இல்லை
கதற.

கரு கலைப்பு

my attempt on the same subject written long back.

Agni said...

Reminds me of an email forward! :)

Jhulfikar Ali said...

Unadu enna pulaimai adikam... andha piravaadha kulandhaikkana kanner en kankalil...

Lakshmi Sahambari said...

@AlL

Thnks for all ur comments :-)