Tuesday, November 4, 2008

திரையாலாகுவது ...



மெல்லியதொரு திரைச்சீலை
நம்மிடையே
அவசியப்படுகிறது
அநேகக் காரணங்கள்
அதற்கானதாய்
என்னிடத்தில்

உன் விழிகளின் வசீகரம்
என்னை விழுங்கிடாதிருக்கவும்

சுவாசத்தின் வெம்மைதனில்
நெகிழ்ந்து இளகாதிருக்கவும்

சிநேகத்தின் பரஸ்பரங்களில்
சிதறுண்டு போகாமலிருக்கவும்

இன்னும்
இனியும்
எத்தனையோ அத்தனையும்
எனைப் பத்திரப்படுத்த

எப்பொழுதேனும்
இதனில் என்னை
முழுவதுமாய் வாரிச்சுருட்டி
உன் உள்ளங்கைக்குள்
பொதிந்து வைக்கவும் ஆகிறது ...

12 comments:

மே. இசக்கிமுத்து said...

கவிதை கலக்கல்..
திரைச்சீலைக்கு பின் இத்தனையும் உண்டா??

kalil said...

ஏதோ இனம் புரியாத உணர்வு தங்கள் கவிதையை படித்த பிறகு

பரத் said...

Clever!!
reading again and again...

அன்புடன் புகாரி said...

நம்பகமில்லாக் காலங்களில்
நம்பத்தகுந்த பெண்மையோடு
கவிதை உண்மையான
மென்மை பேசுகிறது
திரைச்சீலையைத்தாண்டி
மனம் குதித்துக்கிடப்பதை
காண அழகாக இருக்கிறது

Agni said...

Kavidhai vazhakkam paol arumai... Mudivu vazhakkam paol urainadai...

மனுஷம் said...

padhilalikka veendam endra
EGO vai
udaith therinthu ponathu
ungal kavithai...

vetri serukkudan antha kadaisi pathi

Vaazga kavithaayinii

venkat

MSK / Saravana said...

அழகு.. அழகான கவிதை சாகாம்பரி..

sankarasubramanian said...

sahambari,urs poem really excellent. keep it up. mainly the latest one..

Anonymous said...

Puriyuthu Aana Puriyala

Divya said...

மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டிய வரிகள்........மிகவும் உணர்ந்து ரசித்து படித்தேன்:))

Ram said...

Very nice.Keep writing

Manivannan said...

Nice. Good