Sunday, December 7, 2008

இருத்தல்

பத்திரமாய் படிந்திருக்கிறது 
பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் 
பழுப்பேறிய நோட்டுப்பக்கங்களில் 

இதுவே போதுமானது 
உயிரைப்பிழியும் என் தனிமையை 
வரைதலில் எடுத்துரைக்க 

ஜன்னல் கண்ணாடியில் 
மங்கிய வெளிச்சத்தில் 
எனதென ஊகிக்ககூடியதாய் 
ஒரு பிம்பம் 
அனுமதிப்பதில்லை 
தனிமைக்கான என் சித்திரத்தை 

தனிமையிலேனும் 
உண்டாகிறது 
எனக்கான என் இருத்தல் 





 
 

12 comments:

நளன் said...

//இதுவே போதுமானது உயிரைப்பிழியும் என் தனிமையை வரைதலில் எடுத்துரைக்க //

அழகு :)

Unknown said...

What exactly poem reflects will depends on the persons experience of his aloneness, still will it be a poem 2 support or express the aloneness?

ny said...

foto :)

Divya said...

nice:))

[oru chinna request........konjam santhoshama, padichathum mugathil punnagai vara mathry oru kavithai eluthungalei Lakshmi:))]

மனுஷம் said...

ஜன்னல் கண்ணாடியில்
மங்கிய வெளிச்சத்தில்
எனதென ஊகிக்ககூடியதாய்
ஒரு பிம்பம்
அனுமதிப்பதில்லை
தனிமைக்கான என் சித்திரத்தை

Saahambari's Punch

Keep writing Kavithaayini

Kavi "thaa" YINI"

Venkat

Kesavan said...

nicely done.... loved the pic...

apppuram... Divya's request - repeat.... :)

அன்புடன் அருணா said...

//தனிமையிலேனும் உண்டாகிறது எனக்கான என் இருத்தல் //

ம்ம்ம்.....தனிமையிலாவது இருக்கிறதே எனக்கான இருத்தல்...
அன்புடன் அருணா

Lakshmi Sahambari said...

நன்றி செல்வன் :)

@Rasamby

Not necessarily a poem need to express one's own emotion !

And upto me atleast - I slightly exaggerate :P

But still i'm not able to understand your question !

@Kartin

Even i felt .. this poem n picture make a good pair !

Lakshmi Sahambari said...

@ திவ்யா மற்றும் கேசவன் - கண்டிப்பா எழுதுகிறேன் ! வளர்தலும் தேய்தலும் தானே நிலாக்காலம் .. நிறைய உணர்வுகளை கவிதையில் கொண்டு வரணும் - பார்க்கலாம் :)

Lakshmi Sahambari said...

@Venkat/////

Kavi "thaa" YINI"

//////

உங்களின் தொடர்ந்த வாசிப்பும் பாரபட்சமற்ற விமர்சனமும் மிகுந்த ஊக்கம் அளிக்கிறது ; மிக்க நன்றி - வெங்கட் :))))))))))))

Lakshmi Sahambari said...

Mikka Nandri Aruna !!!!!!

hiuhiuw said...

vaazhthugal- anbudan rjn radhamanalan