Tuesday, September 23, 2008

உன் விரல் பிடித்துக் கொள்கிறேன் ...


உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்
அனிச்சையாய் ..
இருள் படர
ஆயத்தமாகும் பொழுது


வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

உறுதியளிக்க முடியாது தான்
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும் உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
இருட்டிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள் தென்படக்கூடும் ..

21 comments:

குட்டி செல்வன் said...

//வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது//

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :)

Ilai thalir kaalam said...

இருளைக் காட்டிலும் மோசமான தாக்கத்தை நீ என்னில் ஏற்படுத்தலாம்:

If words had the power to kill, I am already dead!

வழக்கமாய் தித்திக்கும் என் நள்ளிரவுத் தேநீர் - இந்த பக்கங்களோடு சேர்ந்து சுவைக்கையில் உப்புக் கரிக்கிறது.

Waiting for the next serving...

மனுஷம் said...

உறுதியளிக்க முடியாது தான்
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும் உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்....

...

மற்றும் ஓவியம்...

......நன்று கவிதாயினி...ஆனால்

முரனான முடிவு மட்டுமே...இக்கவிதையை மேலும் பாராட்ட மறுக்கிறது...

தொக்கி நிற்பது போல.....

தமிழ் கவிதை தெரியாத அறிவிலியாகக் கூட இருக்கலாம் நான்

மனுஷம்

முகுந்தன் said...

came to your blog from Divya's manasukkul mathappu.

மிகவும் நன்றாக இருக்கிறது இந்த கவிதை.

krishna said...

வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்/


என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
இருட்டிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள் தென்படக்கூடும் ..///////


எதார்த்தமான உணர்வு நிலைகள், அழகான வார்த்தைகளால் வீரியம் கொண்டு நிற்கிறது....

Delight S said...

Even though i felt the end as bit abrupt, ur way of kindling readers' imagination is commendable..

Good work....

Lakshmi Sahambari said...

@ செல்வா, கங்காதரன்
பகிர்தலுக்கு மிக்க நன்றி :-)

@வெங்கட் மற்றும் டிலைட்

விமர்சனத்திற்கு நன்றி.. முரணான முடிவு என்று சொல்லுதற்கியலாது என நினைக்கிறேன் .. கவிதையின் ஆரம்பம் முதலே ஒரே நேர்கோட்டில் தான் பயணித்து உள்ளதாக நினைக்கிறேன் .. ஒரு முடிவோடு தான் இக்கவிதை தொடங்குகிறது .. பல்வேறு சிந்தனைகள் தோன்றினாலும் அதே முடிவில் மாற்றமில்லாது முடிந்து , அதன் விளைவையும் குறிப்பிடுகிறது ..

@முகுந்தன் மற்றும் கிருஷ்ணா

உங்கள் முதல் வருகை ... மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் விமர்சனம் :-)

Kesavan said...

முதல் முறை அவளுடன் சாலையை கடக்கையில்
அவள் விரல் பிடித்த ஞாபகம் .... உணர்வு மறுபடியும் என்னுள் பட்டாம்பூச்சு பறக்க செய்தது...

அருமையான கவிதை ... வாழ்த்துக்கள் சகாம்பரி ...

venkadesh said...

வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

superbbbb

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

த.கிருஷ்ணமூர்த்தி said...

இந்த மாதம் உயிர்மை இதழில் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதை பார்த்தேன் வாழ்த்துக்கள்!

Away said...

என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்...

Great...

Lakshmi Sahambari said...

@கேசவன்
அடிக்கடி flashback போயிடறீங்க ..:-)))

@வெங்கடேஷ்
உங்கள் முதல் வருகை ... நன்றி :)

Lakshmi Sahambari said...

@ கிருஷ்ணமூர்த்தி மற்றும் Away ... பகிர்தலுக்கு மிக்க நன்றி :)))))))

Manivannan said...

I haven't words to express my feelings about the poem. Really.................... fantastic

Dominic RajaSeelan said...

நான் உங்கள் கவிதைகளை படித்து கொண்டு வருகிறேன் அருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள். இன்னும் அதிகமாக எழுதுங்கள்.

நான் உங்கள் அருகில் உள்ள கிராமத்தில் உள்ளவன்தான் முடிந்தால் இதையும் படித்து பாருங்கள்.

http://makkalai-thedi.blogspot.com/

Dominic RajaSeelan said...

யார் விரல்ன்னு கடைசிவரை சொல்லவே இல்லை.
அருமை

Lakshmi Sahambari said...

Nandri Manivannan !!

@ Dominic

Sure .. will have a look at ur blog :)

//Yaaru Viral ..?? ///


Lol :D

narayan said...

its very nice

Agni said...

Bayamum dhairiya kuraivum vaerana varnitthadhu arumai! :)

Aanaal nambikkai indri kai piditthal enbadhu paol unargiraenae... yaen!

ரமணன்... said...

கை பிடிப்பதை கை தட்டி ரசித்தேன் :)

Praveen said...

Excellent...

All Poems are too good, strong and expressive.

Wish you to write more.