Sunday, October 11, 2009

.....


வெளிறச் செய்யும்
டிராபிக் நெரிசலில் ..
மறவாது எனையழைத்துச் சொன்னாய்
சற்று முன் பொழிந்த
ஆலங்கட்டி மழை குறித்து

அருகிலிருந்தால்
நீ நனைந்திருக்கலாம்
மழைக்காகவோ
உன் அழைப்பிற்காகவோ
எதற்காகவோ
என்னில் பொழிந்த மழையில்

9 comments:

Thulasi said...

எதற்காகவோ
என்னில் பொழிந்த மழையில்...
waw...nice :)

Bhuvana said...

லக்ஷ்மி, துளசி சொல்வது போல் அந்த வரிகள் மிகவும் அருமை! :)

நேசமித்ரன் said...

மனசுக்கு சுளுக்கு எடுக்கும் சொற்கள் சமயத்தில் சுளுக்கும் தந்து போகின்றன அழகு வரிகள்

selventhiran said...

ஒரு பிரம்மாண்ட கவிதைக்கான தயாரிப்புகளோடு துவங்கிய கவிதை சட்டென முடிந்து விட்டது ஆலங்கட்டி மழை போல (இன்னாமா எழுதறடா செல்வேந்திரா...)

நளன் said...

//மழைக்காகவோ உன் அழைப்பிற்காகவோஎதற்காகவோ என்னில் பொழிந்த மழையில்//

romantic.

Sabari Prasad Rajendran said...

ரொம்ப நாளாகவே wait பண்ணிக்கிட்டு இருந்தேன் உன் அடுத்த கவிதைக்காக. இப்போ தான் release பண்ணியிருக்க. நல்லா இருக்கு.

கவிதை வேகமாய் வளர்ந்தது அழகாய் இருந்தாலும், சட்டென்று முடிந்தது ஏமாற்றமே...ஆனால் கருத்தில் குறை ஏதும் இல்லை..

Sabari Prasad Rajendran said...

சொல்ல மறந்திட்டேன்...

கவிதைக்கு ஏற்ற புகைப்படம். எங்கப்பா புடிக்கற இந்த மாதிரி fotos'அ. நான் ஒவ்வொரு post'க்கும் foto தேடற படலம் இருக்கே, அப்பப்பா பெரும் யுத்தம் தான்.

நிலாமதி said...

அழகான வரிகள். பாராடுக்கள்.

பாண்டித்துரை said...

nice - malayai pola