Friday, July 17, 2009

....


எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்

.............

கதவுகள் திறக்கப்பட்டு
வெளிச்சம் வழியும் அறையில்
தரையில் அமர்ந்தபடி
உன்னுடன் அருந்திய
தேநீர் பற்றி

எதிலோ தொடங்கிய
உரையாடல்
லதா மங்கேஷ்கரில்
மையம் கொண்ட பொழுதில்
தூரத்திலிருந்து பிரயாணித்து வந்த
சாவன் கா மகீனா
பாடல் பற்றியும்

நீ ரசித்துச்சொன்ன
குழந்தை பிராயத்து
குதூகலங்களும்
கோமாளித்தனங்கள்
குறித்தும்

மழைக்காலத்து
மேகங்கள் குறித்தும்
லேசாக நனைக்கும்
சாரல் குறித்தும்

அப்பொழுது
அனிச்சையாய் கோர்த்துகொண்ட
நம் விரல்கள் குறித்தும்
முத்தமிட்டது குறித்தும்

............

எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்

எனினும்
பின்மழை பொழுதுகளில்
கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை
காகிதங்களில் வசிப்பதில்லை

18 comments:

உயிரோடை said...

ம்ம் ர‌ச‌னையான‌ வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கீங்க‌.

வாழ்த்துக‌ள்.

//எனினும் பின்மழை பொழுதுகளில் கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை காகிதங்களில் வசிப்பதில்லை//


அழ‌கான‌ வ‌ரிக‌ள்

பரத் said...

ரசித்தேன்

நளன் said...

:))))

நேசமித்ரன் said...

அற்புதங்களை சுற்றியிருக்கும் கணங்களை ஒரு சொல் மிகாமல் ஒரு சொல் குறையாமல் மொழிப்படுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்
எப்போதும் போல இந்தக் கவிதையும் தேவதைகளின் புன்னகை

Sabari Prasad Rajendran said...

I always wonder how people write poems in such a good flow...I am just so amateur in writing like that...

All the best for your poems. They are all so romantic...

Kesavan said...

வாழ்த்துக‌ள் !!! மிக அருமை.... :)

யாத்ரா said...

மிக அருமையான உணர்வுகள், இந்தக் கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

soorya said...

அடடா..,
எங்கே போயிருந்தேன் நான்?
இப்போதானே தங்கள் கவி படிக்கிறேன்.
நன்றாக இருக்கிறதே..!
நன்றியும், வாழ்த்தும்.

அருண்மொழிவர்மன் said...

//னினும்
பின்மழை பொழுதுகளில்
கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை
காகிதங்களில் வசிப்பதில்லை //

இன்றுதான் முதன் முதலில் உங்கள் பக்கத்துக்கு வந்தேன். . ரசனை பூர்வமாக உள்ளது

ny said...

:)

நட்புடன் ஜமால் said...

எனினும்
பின்மழை பொழுதுகளில்
கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை
காகிதங்களில் வசிப்பதில்லை ]]


மிகவும் இரசித்தேன்.

Muthusamy Palaniappan said...

எனினும்
பின்மழை பொழுதுகளில்
கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை
காகிதங்களில் வசிப்பதில்லை

nalla varigal

karthiattorney said...

அருமை தேர்ழி

maya said...

" எழுத வேண்டும் எழுதியே தீர வேண்டும் ... "

அசத்தலான ஆரம்பம்...

காதலும் கவிதையும் கைகோர்த்திட எங்கும் எதிலும் ஒரு பரவசம் படர்கிறது

உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதிற்கும் உள்ளுணர்வின் உந்துதலால் எழுதுவதிற்கும் வேறுபாடுகள் உண்டு

அதை உங்கள் படைப்புகளில் காண்கிறேன்...

"விருதும் விழாவும்" வெகு தூரத்தில் இல்லை :)

வாழ்த்துகள், லக்ஷ்மி !!

sankarasubramanian said...

chance illa. unga kavidhai varigal.

its really coming from ur heart .i believe..

iam really wonder tenkasi la eppidi oru clasa women poeta????

keep it up..

sankaravfx@gmail.com

யாழினி said...

inimayana mazaikala pozudhaipola indha kavithai ...
azagu...

Anonymous said...

ur lines make others long for such a day/ occasion. there u score..
great lines!!!!!

♥Manny♥ said...

உங்கள் வார்த்தைகளை கவிதையில் வாழ விட்டிருக்கிறீர்கள்...