நொடிப்பொழுதேனும் இமைக்காமல்
பார்க்குமாறு செய்துவிடுகிறது
நிறங்கள் கசியும் பூக்கள்
அருகில் சென்று வாசம் நுகர்வதை
அவை ஆட்சேபிப்பதில்லை
தொட்டுத்தடவி மென்மை ரசிப்பதை
கொஞ்சமேனும் மறுப்பதில்லை
பறிக்கப்படுகிற தருணங்களில் அதன்
பலவீனம் மட்டுமே புலப்படுகிறது
வலுவற்ற வஸ்துக்களை அணுகுவது
எளிதானதாக இருக்கிறது
சூரியன்
எப்பொழுதும் எங்கிருந்தோ
பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது ...
12 comments:
nice one
நிறங்கள் கசியும் பூக்கள்
சூரியன்எப்பொழுதும் எங்கிருந்தோ பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது ...
:)
\\அருகில் சென்று வாசம் நுகர்வதை அவை ஆட்சேபிப்பதில்லை
தொட்டுத்தடவி மென்மை ரசிப்பதை கொஞ்சமேனும் மறுப்பதில்லை\\
மிக அழகான வரிகள்:))
\\சூரியன்எப்பொழுதும் எங்கிருந்தோ பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது ...\\
இந்த வரி அருமை லெக்ஷ்மி!
ரொம்ப நாட்களுக்கு அப்புறமா கவிதை பதிவிட்டிருக்கிறீங்க, வாழ்த்துக்கள்!!
தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதுங்க லெக்ஷ்மி:-)
மிக அழகான கவிவரிகள்...
இன்று தான் உங்கள் வலைப்பதிவுக்கு வந்தேன். கவிதைகள் மிக நன்றாக இருக்கின்றன. வாழ்த்துகள்...!!!
மிக அழகான கவிதை :)
பறிக்கப்படுகிற தருணங்களில் அதன்
பலவீனம் மட்டுமே புலப்படுகிறது
This is my fav lines
......Keep going lakshmi
Venkat
Nalla kavidhai... Mudhal iru varigal mattum sattrae thalaippinindru maarupaduvadhai paol (off topic) unargiraen :)
-- Yogaesh (OI)
"நிறங்கள் கசியும் பூ"...தந்தது கவிதை கசியும் பூ ஒன்று..அருமை
..மேலும் தொடரவும்..
மிக அழகான கவிதை
@ ken - Nimal - Selventhiran - charal
Mudhal murai en valaipoovirku vanthuleeragal - Mikka Magizchi :-))))))))
@ Divya - Venkat - selva - Agni
Keep posting ur comments - Really helping to give better poems :-)))
//பறிக்கப்படுகிற தருணங்களில் அதன்பலவீனம் மட்டுமே புலப்படுகிறது
வலுவற்ற வஸ்துக்களை அணுகுவது எளிதானதாக இருக்கிறது //
:)) ரசித்தேன் சாகம்பரி...
நொடிப்பொழுதேனும் இமைக்காமல்
பார்க்குமாறு செய்துவிடுகிறது
நிறங்கள் கசியும் பூக்கள் (Pengal)?
Post a Comment