மரித்த பூக்களுக்கெல்லாம்
காகிதத்தில் கல்லறை செய்து ,
எவனோ உமிழ்ந்த எச்சத்தில்
உயிர் வாழும் அட்டையோடு ,
மெழுகின் மங்கிய ஒளியில் உணவருந்தி ,
நம் காதல் உயிர் பிழைக்க வேண்டாம் ...
நடைபாதை ஆவாரம்பூவை
நடந்தவண்ணம் ரசித்துக்கொண்டு ,
நகராது போன நிமிடங்களைப் பற்றி
நிறுத்தாமல் பேசிக்கொண்டு ,
தெரியாமல் விரல்படவேண்டி
தெரிந்தே உன்னருகில் வரும்பொழுது ,
இரண்டறக் கலந்த மூச்சுக்காற்றை
இயன்றவரை சேகரித்து வை .....
அதில் மட்டும் வாழ்ந்தால் போதும் ,
உனக்கும் எனக்குமான காதல் !
11 comments:
"aahaa" "arumai" "aruputham" endru vimarsithu vitu kadakka mudiyavillai...
may be its a known theme.. but the second part says 'this is what love is' .. Hats Off...
kaadhalai kondaada kaadhali mattum podhum...
kaadhaliyai kondaada kaadhal mattum podhum..
unmai kaadhal aridhu.. purindhu kondal mihavum yelidhu...
//தெரியாமல் விரல்படவேண்டி தெரிந்தே உன்னருகில் வரும்பொழுது ,இரண்டறக் கலந்த மூச்சுக்காற்றை இயன்றவரை சேகரித்து வை .....
அதில் மட்டும் வாழ்ந்தால் போதும் , உனக்கும் எனக்குமான காதல் !//
சாஹம்பரி :))
குறும்பான காதலும், காதலான நிதர்சனங்களும்... கவிதையில்...
கொள்ளை அழகு !!!
Nandri Maya & Naveen :-)
Kadhal endral athu ethu than...
ungal kavithai varigal mulamakavum unarkiren unmayana kadhalai...
Thnks Charithra :-)
\\இரண்டறக் கலந்த மூச்சுக்காற்றை இயன்றவரை சேகரித்து வை .....
அதில் மட்டும் வாழ்ந்தால் போதும் , உனக்கும் எனக்குமான காதல் !\\
சூப்பர்ப்!!....மிக மிக அழகா இருக்கிறது, வாழ்த்துக்கள்!!
Thnks Divya :-)
"தெரியாமல் விரல்படவேண்டி
தெரிந்தே உன்னருகில் வரும்பொழுது"
Awesome - as usual :)
அட்டையுடன் யாரை ஒப்பிடுகிறீர்கள் என்பதே புரியவில்லை...
Attai here refers to greeting card !!
Anyways - Thanks Agni!
aazhaamana artham ulla kavithai...
Kathalin unmaiyana azhage !
poochu illathathuthaan....
Oru Raagam inge kavithai meetiyirukirathu...if sahambari is a raagam...
(typed in English as tamil type is not possible in client place)
Nandri Selventhran.. :-)))
Sahambari Raagathin peyar alla.. KaiKarigalal Seiyapadum Iraiviyin alankarathai kuripathu :)
Post a Comment