Friday, February 1, 2008

இனியும் வரப்போவதில்லை ...

அன்றைப் போன்ற
அழகானதொரு நாள்
இனியும் வரப்போவதில்லை ...

பிரபஞ்சத்தின் ,
ஒற்றை ஆண்மகனோ நீ - எனுமாறு
அகன்ற என் விழிகள் ...
நான் மட்டும் தான் அழகியா - எனச்
சுயசோதனை செய்யச் சொன்ன
தீர்க்கமான உன் பார்வை ,
இனியும் வரப்போவதில்லை ...

அலைகளைத் தாண்டிய
ஆழ்கடல் அமைதியை நினைவுறுத்தும்
மௌனத்தை மையப்படுத்திய
நம் உரையாடல்கள் ,
இனியும் வரப்போவதில்லை ...

அர்த்தமற்ற பரிமாற்றங்கள் ஆயினும்
அதை அர்த்தப்படுத்த முயற்சித்த
தூக்கிய என் புருவங்களும்
தொலையச் செய்யும் உன் புன்னகையும்
இனியும் வரப்போவதில்லை ...

விலகப் போகிறோம் என்ற
நிதர்சனம் அறிந்திருந்தும்
நெஞ்சின் அடியில் ஒட்டிக்
கொண்டிருத்த விருப்பமும் ,

தனித் தனி உலகிற்கான
தயாரிப்பில்லாத மனதும் ,

எழுந்து நடக்க ஆயத்தமான பொழுது
கண்களைப் பிரிய மறுத்த
கண்ணீர் துளிகளும் ,
இனியும் வரப்போவதில்லை ...

அன்றைப் போன்ற
அழகானதொரு நாள் ,
இனியும் வரப்போவதில்லை !

12 comments:

Kesavan said...

I don't like to comment on this one....

i want to thank you for giving such a wonderful lines to commemorate ...my life.. vizhiyorathil oru neer thuli...

so blended with a person's emotion...

Maya said...

yetharthamana unarvugalai adhan iyalbu maramal.. yezhuthukalai padaipathil Sahambariku nihar avarey!!

even small incidents can make a bigger impact, when it is about love..

Fantastic.. lines like
" arthamatra parimaatrangal ayinum.. " and
" thani thani ulahirkana thayaripiladha manadhum..." beautifully presented...

thulasi said...

nta ezhudhinadhula enakku romba pidichadhu...

Lakshmi Sahambari said...

Kesavan , Maya and Thulasi

nandri :-)

தமிழ்ராஜா said...

//பிரபஞ்சத்தின் ,
ஒற்றை ஆண்மகனோ நீ - எனுமாறு
அகன்ற என் விழிகள் ...
நான் மட்டும் தான் அழகியா - எனச்
சுயசோதனை செய்யச் சொன்ன
தீர்க்கமான உன் பார்வை ,
இனியும் வரப்போவதில்லை ...//
நிச்சயம் ஒவ்வொரு பெண்ணும் ,ஆணும் முதல் முறை காதலை சந்திக்கையில் அவர்கள் மனதில்
ஏற்படும் உணர்வு இது தான். என்ன அருமையாக அதை பதிவு செய்துள்ளீர்கள்.கவிதை கூட சில நேரங்களில் பல கதைகள் சொல்லும்,
உங்களின் வரிகள் பல கதைகள் சொல்கின்றன லக்ஷ்மி சாஹ்ம்பரி ....

Lakshmi Sahambari said...

தமிழ்ராஜா - தங்கள் வருகைக்கு மிக்க நன்றி :-)

AASAYAN said...

சகாம்பரி...
என் ஒர்குட் தமிழ் உன்னை இப்படித்தான் மொழி பெயர்கிறது....
மூன்று முறை தவறாக சொல்லி நாலாம் முறை நன்றாக சொன்னேன் ...
சகாம்பரி...
ஒர்குட் வழியே எட்டி பார்த்ததில் தெரிந்தது...
உன் வலைப் பூ...
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு படைப்பாளியின் படைப்புகள்....
மீண்டும் மீண்டும் படிக்கிக்க தூண்டிய படைப்புகள்..
நான் பெண்ணாக பிறந்திருந்தால் என்ன எழுதிஇருப்ப்பெனோ அது போன்ற
மொழியும் அதன் லாவகமும்...
கவிதை மட்டுமல்ல.உங்கள் வலைத்தளத்தின் கட்டமைப்பு,வண்ணம்,ஓவியம்,புகைப்படம் எல்லாமே என்னுள் பதிந்து விட்டது.நன்றி...
நிறைய எழுதுவோம்...
என் படைப்புகள் உங்களுக்காக
http://aasayan.blogspot.com/

Lakshmi Sahambari said...

Thangal varugaikkum .. vimarsanathirkum Mikka Nandri..Aasayan :-)

முத்துகுமரன் said...

வராமலே போனாலும்
பிறர் அறியா
வடுக்களாகவே தங்கிப் போன
காதல்
பிராத்தனை செய்து கொண்டது


யாரும் கீறிடாதிருக்க!

Known Stranger said...

yaraioo nenaika seikerathu intha kavithai padikum pothu..

ithu than kavithai padaipaliyoda vetri.

Agni said...

Enna koora paogiraen ena ungalukkae terindhirukkum! :)

Lakshmi Sahambari said...

@ Muthu Kumarn - Azhagana kavithai :-)

@ Stranger - Thnks :-)

@ Agni - :-))))))))))))