Monday, September 15, 2014

அனக்கங்களற்ற நதி

நானற்று நீ நடந்த
அந்த ஏழாவது அடியில்
பிறக்கிறது
ஓர் அனக்கங்களற்ற நதி

நேற்றிரவு அனிச்சையாய்
படர்ந்தது வரை
நமதான ஸ்பரிசங்கள் யாவும்
இலைகளாய் உருக்கொண்டு
மிதக்கின்றன

ஸ்தம்பித்த மேகங்களின்
கடைசி காதற்துளி
இனி ஏற்படுத்த போவதில்லை
எந்தவொரு அதிர்வையும்
ஏதாவதொரு நீர்த்திவலையையும்

எனினும்
தீர்க்கமாய் தெரிகின்ற
என் பிரதி பிம்பத்தில்
மிக சமீபத்தில்
நீ

3 comments:

உயிரோடை said...

செம நல்லா இருக்கு லஷ்மி. நிறைய எழுதுங்க. தொகுப்பு வர வாழ்த்துகள். ஏதேனும் பத்திரிக்கைக்கு அனுப்பலாமே

Ramki... said...

ரொம்பவே நாளைக்கப்பறம் ... நல்ல கவிதை...

அனக்கம் என்ற வார்த்தையின் அகராதி அர்த்தம் தெரியவில்லை...

Lakshmi Sahambari said...

Nakarvu - endru porul padum