Wednesday, November 4, 2009

...

ஒன்றுமிருப்பதில்லை
இந்தபுகைப்படத்தில் ..

அன்றைய அக்காட்சியின்
உயிர்மையில்லை
நிறத்தின் வீரியமில்லை
நாசி நிறைத்த வாசமில்லை
செவியில் ரீங்காரமிட்ட
சப்தங்களில்லை

கேமரா அறியாது
தீண்டிய உன்விரல்களும்
படபடத்த என்னெஞ்சமும்
நினைவில் வருவதுண்டு

8 comments:

Ayshwarya said...

arumai arumai! :)

பரத் said...

என்னமோ ஒண்ணு குறையுதே!!!

பூங்குன்றன்.வே said...

இந்த கவிதை படிக்கும்போது வெறுமையை உணர வைத்தாலும்,அதுதான் இந்த கவிதையின் வெற்றியாக இருக்கு.ரொம்ப நல்லாவும் இருக்கு.
poongundran2010.blogspot.com

ny said...

touched !!

Arun said...

Enge enadhu kavithai..Enge enadhu kavidhai ezhudiya kavidhai..

selventhiran said...

கொஞ்சம் லேட்டான திருமண நாள் வாழ்த்துக்கள். கவிதை வழக்கம் போல :)

♥Manny♥ said...

என்னங்க ஆச்சு.. எட்டு மாசமா எதுவுமே எழுதல நீங்க..!!! சீக்கிரம்
ரீ-எண்ட்ரி கொடுங்க..

கார்த்திகேயன் said...

உங்களைப் போன்றோர்கள் நிறைய எழுதனும்...அருமையான நடை...யதார்த்தம் உஞ்சலாடுகிறது உங்க விரல்களில்.