Thursday, October 22, 2009

யாரோ சிந்திய புன்னகை



வசீகரமானதாயுள்ளது
யாரோ சிந்திய அப்புன்னகை
முகத்தின் குறைகளனைத்தையும்
கொன்று தின்று விட்டு
எவ்வித சலனமுமின்றி
மெல்ல எழும்புகிறது
என் கவனத்தையும் வார்த்தைகளையும்
பறித்த வண்ணம்
அதன் கோரைப்பற்களை
காண்பிக்கத் துவங்குகிறது
அக்கினியை உமிழ ஆயத்தமாகிறது
என்னிடமிருந்த எல்லாமும்
பொசுங்கத் துவங்குகையில்
நினைவு கூர்கிறேன்
புன்னகைக்க மறந்த
தருணங்களை



4 comments:

அன்புடன் அருணா said...

அச்சோ என்னாச்சு????

மனுஷம் said...

marupadiyum Sahambari..

Good one..

Keep writing

♥Manny♥ said...

என்னங்க ஆச்சு...எட்டு மாசமா எதுவும் எழுதல நீங்க..!!!

Anonymous said...

Mugamoodi....vera solla enna irukiradhu