உன் கன்னக்குழி அழகில்
நான் புதையுறும் பொழுதிலும்
உன் பிஞ்சுவிரல் நகங்கள்
என் முகத்தில் கீறும் கவிதைகளிலும்
உன் கருவிழிகளுக்குளே காணப்படும்
கவலையற்ற என் பிம்பத்திலும்
அயர்ந்து நீ தூங்கும் பொழுதில்
என் தோள் நனைக்கும் எச்சிலிலும்
உன் அதரங்களைத் தாண்டி
வழிந்தோடும் என் உதிரத்திலும்
வரங்களிற்கான கூறுகளைத்
திரட்டிக் கொண்டு
நீ தேவதையென மாறுகிறாய் ....
எனக்குச் சிறகுகள் முளைக்கத் துவங்குகிறது !
10 comments:
\\அயர்ந்து நீ தூங்கும் பொழுதில் என் தோள் நனைக்கும் எச்சிலிலும்\\
So cute......:))
ரொம்ப ரொம்ப அழகான கவிதை!
வாழ்த்துக்கள்!!
அழகான கவிதை :)
மென்மையான வரிகள்..
உன் கன்னக்குழி அழகில்
நான் புதையுறும் பொழுதிலும்
உன் பிஞ்சுவிரல் நகங்கள்
என் முகத்தில் கீறும் கவிதைகளிலும்
உன் கருவிழிகளுக்குளே காணப்படும்
கவலையற்ற என் பிம்பத்திலும்
அயர்ந்து நீ தூங்கும் பொழுதில்
என் தோள் நனைக்கும் எச்சிலிலும்
Poovinum Menmaiyaana Kuzhanthaiyin Sirippu Mattrum Sirappinai Romba Azhagai Solli Irukira :)
Super...Lakshmi...
// எனக்குச் சிறகுகள் முளைக்கத் துவங்குகிறது ! ///
எனக்கு அப்படியே சிலிர்த்து போச்சு மக்கா ...
super-o super.. vazthukkal
arumai
Thaaimaiyai azhaghaai vivarittheer!
"உன் அதரங்களைத் தாண்டி
வழிந்தோடும் என் உதிரத்திலும் "
Thaai paalai udhiramaai kurippittadhu sattrae urutthalaai irundhadhu! Kadai moondru varigal sattrae thadam purandu vittanavao?
-- Yogaesh
@ All
Thnks 4 ur valuable comments !
@ Agni
Uthiram may sound a bit raw.. aana athu thaane Nijam .. Seeing one's own blood n flesh with life in it - is totally a different feel !! Btw - Enakku romba pidichatu antha last few lines !
kavithaigal kirukka enakku therinthaalum... ungal intha kavithayai padithivittu vaarathaigal tholaithu nirkiren naan...
hats off....
Mikka nandri Thanimai Rasigan :-)
உணர்வான கவிதை,
நிறைவான வரிகள்
நன்றிகள்
Post a Comment