Sunday, May 25, 2008

நத்தைக்கூடு



அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது
நத்தை கொண்ட ஓடு .

நகர்வுகள் அனைத்திலும்
உடன் பயணித்து வரும் ஓடு
சுமையாகவும்
ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும் ...

ஓட்டை தவிர்த்த நத்தை
கற்பனைகளில் தோன்றுவதில்லை
உடன்வரும் ஒன்று
அதற்கான அடையாளமாய் ...
நத்தை கொண்ட
கூட்டிற்கான நகலாய்
பெண்ணின் வரையறைகள்
அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது

ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும் .

19 comments:

Dreamzz said...

வாவ் வாவ் வாவ்... ஆழமான அர்த்தங்கள் :) liked it..

Divya said...

Reallyyyyyyy superrrrrrrrrr,

indepth meaning oda kavithai really very nice Lakshmi!!

Nanda Nachimuthu said...

//பெண்ணின் வரையரைகள்....

????

அப்படியெல்லம் ஒன்னும் இல்லீங்க...

எல்லாம் நாமலே நினைச்சுக்கறதுதான்....

நினைச்சு நினைச்சு கடைசியில் நிஜமாக ஆகிவிடுகிறது.

I personally feel all feminian thoughts are make belief...

We have lots of instances where females are proving this concept.

Best
Nanda

Nanda Nachimuthu said...

//ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும் //

கவிதையின் பொருளில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும்

கவிப் படுத்திய விதம் அருமை.

பராட்டுக்கள்.

மனுஷம் said...

Nice Poem. I too have the same view of Nanda

Keep going Sahambari

Unknown said...

writing at diff phase with diff thoughts gives u power in ur pen...
good poem ... still I feel the limitations are created nor born but it is for goodness...
wnts u 2 rite abt courtallam pls

புபேஷ் said...

நத்தை கொண்ட கூட்டிற்கான நகலாய் பெண்ணின் வரையறைகள்.....
அணிந்து கொண்டதோ,அணிவிக்கப்பட்டதோ தெரியாது ....
nalla iruckunga

மாயோன் said...

சுகமான சுமைகள்
பெண்ணின் வரையரைகள்
மிக உண்மை.

தாய்மையில் மட்டுமே
ஆண்மையும் பெண்மையும்
இருப்பதில்

இறைவா உன்மீது
கோபமும்
பெண்ணே உன்மீது
பொறாமையும்
உண்டு எனக்கு.

நளன் said...

ஆழ்ந்த‌ அர்த்த‌ங்க‌ள் :)

கண்மணி/kanmani said...

simply superb....

கோகுலன் said...

பெண் நத்தை உவமை நன்று!

கவிதை அழகு!

வாழ்த்துக்கள் தோழி!

Agni said...

Miga arumai!

-- Yogaesh (OI)

Lakshmi Sahambari said...

@ All - Thnks 4 Ur valuable comments !

@ Nandan n Jillu - Me Being a female i sometimes feel there are certain things - so called limitations - which has become a part n parcel of me ! Since it doesn't restrict me to acheive wat i want - i'm simply happy with its existance !!

Anonymous said...

Ur album's and blog's are so nice......

Anand said...

பெண்ணிற்கு மட்டுமல்ல...ஆணுக்கும் வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து...எந்த மாதிரி வரையறைகள் இருபாலருக்கும் என்பதில்தான் இதுவரை பிரச்னை...இருந்தாலும் நீங்கள் அதை கவிதை மூலம் ஒப்பீடு செய்த விதம் மிக மிக அருமை....
எனக்கு மிகவும் பிடித்த அர்த்தமுள்ள கவிதை...!!

Anonymous said...

மிக மிக அருமையான வரிகள் ...
எனக்கும் உங்கள் கவிதை மட்டுமல்ல கருத்துடனும் உடன்பாடே...
நன்றிகள் பல ... தொடரட்டும் உமது சேவை...

அன்பு நண்பன்.

Ram said...

ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும்

Superb!Nitharsanamana unmai!

Dhaya said...

Really Nice... I like it... !!

nitz said...

superb :)