Sunday, May 4, 2008

மேகத்தின் மிச்சங்கள் ..


அடர்ந்ததாயும் ,
ஆகாயத்தின் பரந்த வெளியில்
திசைகளின்றி திரிவதாயும்
நகரும் ஓவியமாயும் இருக்கின்ற மேகம்
நொடிப் பொழுதேனும்
ஒளிகற்றைகளை உள்வாங்கிக்கொண்டு
இருளின் அறிமுகத்தைச் செய்து ,
பிழியப்படுதலை விரும்பாது
அனுமானிக்க முடியாத கணத்தில்
பொழிதலை துவங்குகிறது.

கரையத்துவங்கும் கார்மேகம்
பெருமழையாய் மாறி
தீண்டியவற்றை எல்லாம்
கரையச் செய்து ,
நிலத்தின் ஏற்ற இறக்கங்களில்
தன் இருத்தலை உணர்த்திவிட்டு
அங்கும் இங்கும் எங்குமாய்
எல்லாமுமாய் எல்லாவற்றிலுமாய்
நிரம்பி வழிகிறது .
பின்னொரு பொழுதில்
எல்லாமும் நின்றுபோய்
வெறுமையும் நிசப்தமும்
ஆட்கொண்ட பொழுதில்
இளந்தளிரின் நுனியிநூடே
துளிகளாய் வடிந்து
பிரபஞ்சத்தின் பேரிசை
ஒன்றை விட்டுச் செல்கிறது ..

உன் விரல்நுனி எப்பொழுதாவது
இந்த பேரிசைக்கான குறிப்புகளை
என்னில் விட்டுச்சென்றதுண்டு ....

11 comments:

Unknown said...

Happenings are not in our control where as enjoying that moment is in our hand.

Neither happy about it nor sad about it.

How u want to be...

Its good poem on that issue.

மனுஷம் said...

பின்னொரு பொழுதில்
எல்லாமும் நின்றுபோய்
வெறுமையும் நிசப்தமும்
ஆட்கொண்ட பொழுதில்
இளந்தளிரின் நுனியிநூடே
துளிகளாய் வடிந்து
பிரபஞ்சத்தின் பேரிசை
ஒன்றை விட்டுச் செல்கிறது

Class...Touzi...
HATS OFF...
Keep Going..

Divya said...

\பின்னொரு பொழுதில் எல்லாமும் நின்றுபோய் வெறுமையும் நிசப்தமும் ஆட்கொண்ட பொழுதில் இளந்தளிரின் நுனியிநூடேதுளிகளாய் வடிந்து பிரபஞ்சத்தின் பேரிசை ஒன்றை விட்டுச் செல்கிறது .. \\

யதார்த்தம்!

அருமையான வரிகள் ,பாராட்டுக்கள்!

MSK / Saravana said...

பிரமாதமான கவிதை.. பாராட்டுக்கள்..

நளன் said...

அழகான கவிதை கா :)

Intricate Labyrinth said...

So is the power of smile ,
the one smile that rips the heart open
leading to a lot of tears
the smile that ripped my heart is a lightning
the tears that drained out - a rain

An analogy that i find coherent to what you have written.

Excellent indeed , nice way of showing examples.

Agni said...

"கரையத்துவங்கும் கார்மேகம்
பெருமழையாய் மாறி
தீண்டியவற்றை எல்லாம்
கரையச் செய்து"

"பின்னொரு பொழுதில்
எல்லாமும் நின்றுபோய்
வெறுமையும் நிசப்தமும்
ஆட்கொண்ட பொழுதில்
இளந்தளிரின் நுனியிநூடே
துளிகளாய் வடிந்து
பிரபஞ்சத்தின் பேரிசை
ஒன்றை விட்டுச் செல்கிறது"

Ivvirandu pagudhigalum miga arumai! Karaindhum karaitthal - nalla chittharippu!

Kadai moondru varigal mattum urai nadaiyil vandhadhaenao!!

Lakshmi Sahambari said...

@ All - thnks for ur comments !!

@ Agni - Therila - but simply i loved those lines !

Perumazhai tharatha Isaiyai oru neer thuli vadithalil ketka iyal kirathu ... Punarthal tharatha inbathai - viral theendal thanthu vittuch selkirathu !!

Anand said...

பிரமாதமான கவிதை..
எந்த எந்த விசயத்தை ஒப்பீடு செய்தால் நல்லா இருக்கும்னு உங்களுக்கு நல்லாவே தெரியுது :-) கலக்குங்க தோழி..!!

Muthusamy Palaniappan said...

கரையத்துவங்கும் கார்மேகம்
பெருமழையாய் மாறி
தீண்டியவற்றை எல்லாம்
கரையச் செய்து..,

Nice

Anonymous said...

Hi Sahambari!
All the poems are really fantastic. Fortunately I see ur orkut community and personal orkut. Keep it up