Sunday, March 30, 2008

வேண்டுதல் ...வேண்டாமை ...


அங்கே எல்லாரும்
சிகப்பு பந்துகளையும்
மஞ்சள் பந்துகளையும்
வேண்டினார்கள்

அவள்
மஞ்சள் பந்தை வேண்டினாள்
நீல பந்து கிடைத்தது
இன்னொருத்தி
சிகப்பு பந்தை வேண்டினாள்
மஞ்சள் தான் கிடைத்தது

அதோ ஒருத்தி
சிகப்பு பந்துகளையும்
மஞ்சள் பந்துகளையும்
தன்னகத்தே கொண்டு
எதையோ தேடியவளாய்
நடந்து சென்றாள் ..
அவளின் மகிழ்ச்சிக்கான காரணி
இன்னொருத்தியின் சுமையாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறது

வண்ணங்களையும் வடிவங்களையும்
மீறியதாய் தோன்றும் மகிழ்ச்சி
எங்கேயோ
ஒளிந்து கொண்டு இருக்கிறது
மனங்களில் மட்டும் இருப்பதில்லை ....

14 comments:

Dreamzz said...

mmm chinna kavidhaila oru alagaana karutha solliteenga :)

Kesavan said...

உண்மை, மனிதர்கள் மகிழ்ச்சியை அகத்தில் வைத்து கொண்டு, புறத்தில் உள்ள நிலை இல்லாத பொருட்கள் மீது தேடி கொண்டு இருக்கின்றார்கள், ... நானும் அதற்கு விதி விலக்கல்ல.. :(

Poongundran said...

Naanum neraiya kavithaigal ezhuthiullen,but one of them never satisfied me,but others are impressed.aana muthal muraiya unga kavithaiya padithapo romba aazhama ennai impress pannidichu.keep up writing such kind of good poems-Poongundran2008@gmail.com

maya said...

// அவளின் மகிழ்ச்சிக்கான காரணி.. இன்னொருத்தியின் சுமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது //

ஆழமான தத்துவம்.. கவிதை வடிவில்... Splendid !!

What i believe is ...
கேட்ட பந்து கிடைத்தாலும் மகிழ்வென்பது தற்காலிகம் தான்... பற்றில்லா வாழ்வில் கிடைக்கும் அமைதியே மாசில்லா மகிழ்ச்சி!!

Lakshmi Sahambari said...

Dreamzz ... Kesavan.. Poongundran ..Maaya

Thanks :-)))))

@Kesavan
Seems u took it in a different dimension !

@PoongundraN

Muthal varugai ungaludaiyathu - Varugaikuk Vimarsanathirkum Nandri !!

@Maya
Venduthal-Vendaamai ..Ok va?

(Athavathu Venduthalai vendaamai )

maya said...

Perfect. Sorry, I took it this way "Venduthal.. (matrum) Vendaamai.. " Title la kavanama vasikkala. But now, i would say the title makes the poem more meaningful.

மங்களூர் சிவா said...

nice poem

Lakshmi Sahambari said...

Thnks Shiva!!

Known Stranger said...

nalathoru padaipu paditha oru thirupthi in this blog spot. something beyond the concept of love.

Divya said...

சொல்ல நினைத்த கருத்தை அழகாக உணர்த்தியிருக்கிறீங்க, அருமை!!!

Anonymous said...

நல்ல ஆழமுள்ள படைப்பு.
பிர‌ப‌ஞ்ச‌த்தின் இய‌ங்கு விதியை வாழ்க்கையின் இய‌ங்கு விதியை
க‌ண்டுபிடிக்க‌ முய‌ன்று முடியாம‌ல் போன‌தால் வ‌ந்த‌ ஆத‌ங்க‌த்தின் வார்த்தைக‌ள்.சும்மா உட்கார்ந்து யோசித்துகொண்டே ம‌ட்டும் இருந்தால் இத‌ற்க்கெல்லாம் விடை காண‌ இய்லாது...

Lakshmi Sahambari said...

@ Stranger

Mikka Nandri ! U can def find some philosophical stuff (!!!) with a blend of love in this blog.. Like sapthamidum nisapthangal.. kannadi.. etc.

@Diya

:-)))))))))

@Karthikeyan

Vinavikonde irukka vediya vinaa ithu ... vidai kidaipinum thirupthi tharathu..!

Agni said...

Muttrilum sari...

Idhu kurittha yen karutthu...

Lakshmi Sahambari said...

@ Agni - Worth reading !