உயிரின் கடைசி துகள்கள்
என்னை நீங்கத் தீர்மானித்த பொழுதில்
காற்றின் கரங்களை பற்றிக்கொண்டு
காலத்தின் கைபிடிக்குள் சிக்காது மீட்டு
மலைமுகட்டில் ஒரு கழுகுக்
கூட்டை என் இருபிடமாக்கினாய்
புள்ளியாய் மட்டுமே நீ தோன்றக் கூடிய தொலைவில்
புறப்படத் துவங்கிற்று என் பிரியத்தின் பிரவாகம்
உன் சுவாசத்தின் நெடி அறிய
புழுவாய் நெளிந்து நெருங்கவே
பறந்து விலகி உனக்கான தாகம் கூட்டினாய்
உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்
அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலை பெருந்துயராக்கிப் போனது
உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்
என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..
25 comments:
அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலை பெருந்துயராக்கிப் போனது
உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்
என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..
--------------------
தொடு வானம் போல்
அழகாய்
புதிதாய்
புதிராய்
பெண் வாசத்தோடு...
மொத்தத்தில் இனம் தெரியா உலகத்தின் அருகாமையாய்..
தொடு வானத்தை நோக்கி
தொடரட்டும் உங்கள் பாதை
இது போன்ற கவிதைகளுடன்
கவிதைக்கு பொய் அழகு - என விழையும்
உங்கள் வாசகன்
வெங்கட்
மிக மிக மிக மிக மிக மிக அருமையான கவிதை.. ஒவ்வொரு வரியும் கவிதை..
:)
காதலனை விட காதலை அதிகம் நேசிப்பீர்கள் போலும்....
கடுகுயிர் ...காரக் காதல்..
அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலை பெருந்துயராக்கிப் போனது
உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்
என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..
really amazing lines...all the best for u...
வாவ்.....ரொம்ப நல்லாயிருக்கு லெக்ஷ்மி கவிதை!
ஒவ்வொரு வார்த்தையும் அழகா, அற்புதமா இருக்கு,
ரசித்தேன்!!
வாழ்த்துக்கள் :))
//உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்//
மிக அருமை.
மிக அருமையான பதிவுகள் லஷ்மி சாகம்பரி... இனிதே தொடர வாழ்த்துக்கள்...
With no disrespect i could not understand these lines :-(
//உன் சுவாசத்தின் நெடி அறிய
புழுவாய் நெளிந்து நெருங்கவே
பறந்து விலகி உனக்கான தாகம் கூட்டினாய் //
அட... !!!
//அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலை பெருந்துயராக்கிப் போனது //
காதல் சூலுரும் வேளையில்
சோகமும் சூழ்கொண்டதா..?!!!
ரசித்தேன் சாகம்பரி.. மேலும்
தொடருங்கள்...
//உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்//
ரொம்ப சோகமா இருக்கு
காதலின் வேதனை முகம் மேலோங்கி நிற்கின்றது!!
நின் கனவுகளும் காதலும் வாழ்க!!!
உங்கள் கவிதையை உயிரோசை இதழில் மீண்டும் ஒரு முறை வாசிக்க நேர்ந்தது. வாழ்த்துக்கள்....
@வெங்கட் மற்றும் சரவணா குமார்
உங்களின் தொடர்ந்த வாசிப்பும் விமர்சனமும் ஊக்கம் அளிக்கிறது ..
// கவிதைக்கு பொய் அழகு - என ...//
நெஜமாவே பொய் தாங்க .. :-))))))))))
***********************************
@ செல்வேந்திரன்
காதலனை விட காதலை அதிகம் நேசிப்பீர்கள் போலும்....///
காதலன் எல்லாம் எனக்கு கிடையாதுங்க .. ஆனா காதல் நிறைய இருக்கு ..
"சந்தித்திராத உனக்காக
சேமிக்கத் தொடங்கிவிட்டேன் ,
.........
காதலை !
நாணயங்களை மட்டுமே பார்த்த
உண்டியல் - என்
நாணத்தால் திணறுகிறது ;) "
எப்பொழுதோ எழுதிய இவ்வரிகள் நினைவிற்கு வருகிறது :-)))
@ கிருஷ்ண மூர்த்தி - ஒ .. உயிரோசையில் பார்த்தீங்களா ?? ரொம்ப மகிழ்ச்சி-ங்க .. மேலும் கீற்று மற்றும் அதிகாலை போன்ற பத்திரிகைகளிலும் வந்து இருக்குங்க :)
@ திவ்யா , இலக்குவணன் ராம்குமார் ,செல்வன் மற்றும் நவீன்
வருகைக்கும் விமர்சனத்திற்கும் ரொம்ப நன்றி :-)))
@ L-O-G-A
Ooops.. the poem is not much complicated i guess .. the theme would be - like or dislike isn't towards the person - but the image/frame which we have with regards to them .. for this theme i've used love as an instrument.. tht's it.. :-)
@ அருண்குமார்
//காதலின் வேதனை முகம் மேலோங்கி நிற்கின்றது!!
நின் கனவுகளும் காதலும் வாழ்க!!! ///
:-)))))))
பொதுவாகவே என் கவிதைகளில் காதல் அதிகம் தென்பட்டாலும் - காதலை மட்டுமே முன்னிறுத்தி அவை எழுப்படுவதில்லை .. ஏதேனும் ஒரு கருவை அல்லது கருத்தை சொல்ல காதல் பயன்படுகிறது ...
லக்ஷ்மி,
வசீகரமான, என்னால் பொறாமை மட்டுமே படக்கூடிய, வார்த்தைப் பிரயோகங்கள். நன்று. உயிரோசை/கீற்று கவிதாயினியா நீங்கள். I am honoured.
அனுஜன்யா
வருகைக்கு நன்றி அனுஜன்யா .. உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி :-)))))))
Splendid ...very good thought process ..
"உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்..."
ரொம்ப அருமையான வரிகள்..!! வார்த்தைகளை நீங்க கோர்க்கிற விதம் ரொம்ப நல்லா இருக்கு..!! காதல் கவிதை தானே? இன்னும் கொஞ்சம் இறுக்கத்தை தளர்த்தலாமே? :-)
உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்
என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும்...
:-) Nice.,
@ கணபதி மற்றும் ஆனந்த் ... முதல் வருகை .. மிக்க நன்றி :)))))))
@Away.. thanks a lot :)
Very nice.. Nalla message Lakshmi.
But i have a doubt out here.. anumaanathirkum nambikaikum neraya difference iruka? both have no base.
anumaanathin muthirchi than nambikai correct ah?
@ maya..
//anumaanathin muthirchi than nambikai correct ah? //
Totally agree - positive anumanathim muthirchi nambikkai !!
Hi Sahambari
Pennin menmaiyana unarvugalai ethaivida azhagaka yaarum velipaduthamudiyathu.
Unn nerukathin vemmai kidaikathu poyinum
Ariviparra mazhayai nee ennai nanaikka thodangiya pozhuthil
unnakana thagam vatrath thuvangi
unn iruuthalai perunthuarakki ponathu
Enn anumanagalukku
uyir irunthirukkalam
naan minji irrukka kudum
Enna azhamana varigal
kaadalin valiyai
udainthupona nambikkaiyai
thavipudan kathirukkum
peenin thudipai
azhagai
menmaiyai
pennin unarvugalodu
arumaiyana kavithai padaithatharku
nanri sahambari
thodrattum ungal
kavithondu
with love
viji
Post a Comment