வெகு நாட்கள் கழித்து
கண்ணாடி பார்க்கிறேன் ...
வற்றிய ஆற்றங்கரையின்
சலனமற்ற மணற்பரப்பாய்
மாறியிருந்தது முகம்
ஒளிர்ந்ததற்கு அடையாளமாக
கண்களைச்சுற்றி கரியின் சுவடுகள்
வான் மறைக்க விழையும்
பொழியாத மேகமாய்
புரிதல் தராத புன்னகை
விடுதலை விரும்பாத
விழிநீர்த் துளிகள்
இவ்வாறு ,
மாறியவற்றை எல்லாம்
கூர்ந்து பார்க்கிறேன் .
மாற்றங்களுக்கெல்லாம்
கர்த்தாவாய்
நீ எட்டிப் பார்க்கிறாய் ...
பிற்பகுதியில்
நீ மட்டுமே
தெரியத் துவங்குகிறாய் ...
அகத்தையும் காட்டுமெனில்
பார்த்திராமல் இருந்திருப்பேன்
........
கண்ணாடியை !
8 comments:
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்
ur poem...
keeps me thinking...
hw would u would have thought and brought it into words...
gr8 work
wishing u to bring more one social issues.
rasamby
Thnks Barath and Rasamby :-)
முதல் முறை வரேனுங்க.. கவிதை அருமை..
உண்மை தான்.. மனதின் எல்லாவற்றையும் மறைத்து, புறத்தா மட்டுமே காட்டுவதால் தான் கண்ணாடியும் அழகு..
-
ட்ரீம்ஸ்
இப்படியும் கூடவா எண்ணங்களை எழுத்துக்களாக்க முடியும்........வியந்தேன்!!
Varugaikku Nandri - Dreamz and Divya !
Arumai... Ungal uvamaigal miga miga azhutthamaanavaialaagavum, rasikkum badiyaagavum ullana... Bharathiyin uvamaigalukku pinn ungal uvamaigalaiyae indha alavukku rasitthirukkiraen...
"ஒளிர்ந்ததற்கு அடையாளமாக
கண்களைச்சுற்றி கரியின் சுவடுகள்"
Class...
Linked ur blog from mine!
Thanks a lot -Agni !!
Post a Comment