இந்தபுகைப்படத்தில் ..
அன்றைய அக்காட்சியின்
உயிர்மையில்லை
நிறத்தின் வீரியமில்லை
நாசி நிறைத்த வாசமில்லை
செவியில் ரீங்காரமிட்ட
சப்தங்களில்லை
கேமரா அறியாது
தீண்டிய உன்விரல்களும்
படபடத்த என்னெஞ்சமும்
நினைவில் வருவதுண்டு
என் கைகளை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்... உணர்வுகளும் வார்த்தைகளும் நிரம்பிய என் உலகிற்கு உங்களை கூட்டிச்செல்கிறேன் ...